ஹலோ ரங்கசாமி, எனக்கே ஓட்டு போடுங்க.. பிரணாப் கோரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வரும், அகில இந்திய என்ஆர் காங்கிரஸின் தலைவருமான ரங்கசாமியை பிரணாப் முகர்ஜி தொலைபேசியில்தொடர்பு கொண்டு தனக்கே வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரங்கசாமியும் தனது ஆதரவைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி ஒவ்வொரு கட்சித் தலைவராக தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாலை ரங்கசாமியுடன் பேசியுள்ளார். அப்போது தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதை ரங்கசாமி ஏற்றுக் கொண்டாராம்.
புதுச்சேரி சட்டசபையில் ரங்கசாமி கட்சிக்கு மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏக்களில் 15 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் ஓட்டும் உங்களுக்கு ... பிரணாப்புக்கு கெளடா ஆதரவு
இதேபோல பிரணாப் முகர்ஜிக்கு மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளத் தலைவர் தேவகெளடா ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரணாபின் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக தேவகெளடா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications