இந்திய சாப்ட்வேர் துறை வர்த்தம் ரூ. 12.5 லட்சம் கோடியை எட்ட வாய்ப்பு.. ஆனால்,

ஆனால், இதில் 80 சதவீதம் அமெரிக்கா, ஐரோப்பா அல்லாத பிற நாடுகள் மூலமான வர்த்தம் மூலமே சாத்தியமாகும் என்றும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஜப்பான், சீனா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய சாப்ட்வேர் துறை கிளைகளைப் பரப்ப வேண்டியது மிக மிக அவசியமாகும் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நாடுகளில் உள்ள சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதும், அவற்றை வாங்குவதும் மிக மிக அவசியம் என்றும் நாஸ்காம் கூறியுள்ளது.
இதுவரை சீனாவிலும் ஜப்பானிலும் பெரிய அளவில் கால் பதிக்கும் இந்திய ஐடி நிறுவனங்களில் முயற்சி பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமான மொழிப் பிரச்சனை, கலாச்சார வேறுபாடுகள், அந்த நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் இந்திய நிறுவனங்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.
விப்ரோவின் வருவாயில் ஜப்பானின் பங்கு வெறும் 1 சதவீதமாகவே மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ், இன்போசிஸ் ஆகியவற்றின் நிலைமையும் இதே தான்.
இன்போசிஸ் நிறுவனத்துக்கு சீனாவின் ஷாங்காய் நகரில் 3,092 ஊழியர்கள் உள்ளனர். ஆனால், அந் நாட்டின் மூலமாக இன்போசிஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும் வருவாய் 200 மில்லியன் டாலர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications