சென்னையில் மேலும் 8 மேம்பாலங்கள், 5 சுரங்கப் பாதைகள், ஆகாய நடை பாதை-ஜெ அறிவிப்பு

அந்த வகையில் 3,793 கோடி ரூபாய் மதிப்பில் புதுச் சாலைகள் மற்றும் புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிப்பதற்கும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை, ஜவஹர்லால் நேரு சாலையில், காளியம்மன் கோயில் தெரு மற்றும் சென்னை புறநகர் பேருந்து நுழைவு வாயில் சந்திப்பில் 40 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டுதல்,
பெரியார் ஈ.வெ.ரா சாலையில், அமைந்தகரை அருகில் கூவம் ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் கூடுதல் மூன்று வழித்தடப்பாலம் அமைத்தல்,
மவுண்ட் - பூந்தமல்லி ஆவடி சாலையில் 5 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக இரண்டு வழித்தடப்பாலம் அமைத்தல்,
மவுண்ட்-பூந்தமல்லி ஆவடி சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் பாலத்தை அகலப்படுத்துதல், சிங்கப் பெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் -திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் 2 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக இரண்டு வழித்தடப்பாலம் அமைத்தல்,
காரனோடை, மீஞ்சூர் சாலையில் 9 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் அமைத்தல், தாம்பரம் - முடிச்சூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 2 கோடி ரூபாய் செலவில் மூழ்கு பாலம் அமைத்தல்,
சென்னை கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 2 கோடி ரூபாய் செலவில் மூழ்கு பாலம் அமைத்தல், சென்னை கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் மூழ்கு பாலம் அமைத்தல் என 8 இடங்களில் 30 கோடி ரூபாய் செலவில் பாலங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா சாலையில், சின்னமலை அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சுரங்க நடைபாதை அமைத்தல், ஜி.எஸ்.டி. சாலையில், கிண்டி, எம்.கே.என். சாலை சந்திப்பு அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சுரங்க நடைபாதை அமைத்தல், ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், மல்லாடி நிறுவனம் அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சுரங்க நடைபாதை அமைத்தல்,
ஜவஹர்லால் நேரு சாலை, காசி திரை அரங்கம் அருகில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சுரங்க நடைபாதை அமைத்தல், ஜவஹர்லால் நேரு சாலை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகில் 5 கோடி ரூபாய் செலவில் சுரங்க நடைபாதை அமைத்தல் என மொத்தம் 19 கோடி ரூபாய் செலவில் 5 சுரங்க நடைபாதைகள் அமைக்கவும்,
ஈ.வெ.ரா. சாலையில் உள்ள சென்ட்ரல், பூங்கா மற்றும் பொது மருத்துவ மனை பகுதிகளை இணைத்து 20 கோடி ரூபாய் செலவில் ஆகாய நடைபாதை அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு 109 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம், பாலங்கள், சுரங்க நடை பாதைகள், ஆகாய நடை பாதை ஆகியவற்றை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதன் மூலம், போக்குவரத்து நெரிசல் குறையவும், குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications