For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு- நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய பாஜக

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா நடத்தியது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாக்பூரில் நிதின் கத்காரி, மும்பையில் வெங்கையா நாயுடு, மஹராஷ்டிராவில் கோபிநாத் முண்டே, போபாலில் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய பிரதேசத்தில் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 256 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

ஒரு ஊழல் அரசுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமை தாங்குவதாகவும் இந்த ஊழலின் பாதுகாவல்ராக சோனியா காந்தி இருந்து வருவதாகவும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகால ஐக்கிய மக்கள் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் இதுவரை சரித்திரம் காணாத ஊழல்கள் நடைபெற்றுள்ளன என்பதும் பாஜகவின் புகார்

English summary
BJP has launched a one-day jail bharo agitation on Friday across the country with party leaders and workers courting arrest to protest against the hike in prices of essential commodities and petrol products.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X