For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பறக்கும் ரயில்களின் வேகம் குறைப்பு

Google Oneindia Tamil News

Chennai Train
சென்னை: சென்னையில் விபத்து ஏற்படாமல் இருக்க பறக்கும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே தினமும் தலா 67 ரயில்கள் இயககப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே தினமும் செல்லும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரயிலும் 10 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயங்குகின்றன.

ரயில்களின் வேகம் திடீரென குறைக்கப்பட்டாதல் பயண நேரம் அதிகரித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் ரயிலின் வேகம் குறைக்கப்படுவது மக்களுக்கு பெரிதும் அசவுரிகயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பறக்கும் ரயில் பாதையில் அதிக அளவில் வளைவுகள் உள்ளதால் ரயில்கள் வேகமாக செல்லும் போது ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அதிகமாக உரசுகின்றன. இதனால் சக்கரங்களை மாற்ற வேண்டியுள்ளது. மேலும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இல்லை எனில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தான் பறக்கும் ரயில் மார்க்கத்தில் செல்லும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கடற்கரை- வேளச்சேரி இடையிலான ரயில்கள் இரவு நேர ரயில்களாக விரைவில் இயக்கப்பட உள்ளது என்றார்.

English summary
Railway department has reduced the speed of trains that run from Chennai beach-Velachery route.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X