அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிய விவகாரம்: கர்நாடக சட்ட அமைச்சர் ராஜினாமா
பெங்களூர்: கர்நாடகத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்ட அமைச்சரான சுரேஷ்குமார் பெங்களூரில் அரசுக்குச் சொந்தமான 4 ஆயிரம் சதுர அடியை அடிமாட்டு விலைக்கு வாங்கினார் என்பது குற்றச்சாட்டு. ரூ3கோடி மதிப்பிலான நிலத்தை தமது பெற்றோர் பெயரில் ரூ10 லட்சத்துக்கு வாங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்று புகார் கூறப்பட்டது.
இதையடுத்து தம் மீது புகார் வந்துள்ள நிலையில் தார்மீக அடிப்படையில் சட்டத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் சதானந்தா கவுடாவிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் சதானந்தா ஏற்கவில்லை என்றும் அதனால் ராஜினாமா கடிதத்தை அவரது மேசையில் வைத்து விட்டு சுரேஷ்குமார் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தாம் வாங்கிய 4 ஆயிரம் சதுர அடி இடத்தை பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திடம் திருப்பி ஒப்படைத்து விடுவதாக கடிதம் ஒன்றை சுரேஷ்குமார் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications