2 நாள் போராட்டத்துக்குப் பின் மீண்டு வந்த 6 வயது பிரின்ஸ்.. ஒரு பிளாஷ்பேக்!

ஹரியானாவின் குருஷேத்ராவில் இப்படித்தான் 2006ம் ஆண்டு பிரின்ஸ் என்ற 6 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து விட்டான். இதனால் நாடே பெரும் பரபரப்பில் மூழ்கியது. கிட்டத்தட்ட 2 நாள் போராட்டத்துக்குப் பின்னர் அச்சிறுவனை ராணுவ மீட்புக் குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
ஆனால் இன்று அதே ஹரியானாவில், சிறுமி மஹி போர்வெல் கிணற்றில் விழுந்து கிட்டத்தட்ட 4 நாட்கள் உயிருக்குப் போராடி பரிதாபமாக உயிரிழந்துள்ளாள்.
இதேபோன்று நாட்டில் கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள்
- ஆக்ராவில் 15 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த 2 வயது சோனு என்ற சிறுவன் பத்திரமாக மீ்ட்கப்பட்டான்.
- ஜெய்ப்பூரில் 2009ம் ஆண்டு 25 அடி ஆழ போர்வெல் கிணற்றில் ஐந்து வயது சிறுவன் விழுந்து விட்டான். அந்த சிறுவனை ராணுவ மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். அதே போல, அந்த ஊருக்கு அருகே தாசா மாவட்டத்தில் 50 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த அஞ்சு குஜ்ஜார் என்ற 4 வயது சிறுமியும் பத்திரமாக மீ்ட்கப்பட்டாள்.
2009ம் ஆண்டு குஜராத் மாநிலம் பலன்பூர் என்ற கிராமத்தில் 100 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் கிர்தான் பிரனாமி பரிதாபமாக உயிரிழந்தான்.
- ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே 35 அடி ஆழ போர்வெல் கிணற்றில் சிக்கிய 2 வயது தராவத் மகேஷ், 24 மணி நேரம் உயிருக்குப் போராடி உயிரிழந்தான்.
- 2011ம் ஆண்டு தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் 200 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இப்படி தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் போர்வெல் கிணறுகளில் விழுந்து உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை தொடர்கதையாகியுள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையும் தொடர்வதாக மக்கள் குமுறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications