குமரியில் விடிய, விடிய வெளுத்துக்கட்டிய மழை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பிடித்த மழை மறுநாள் அதிகாலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சாரலாகவே நீடித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைகளுக்கான நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 13.75 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 44.55 அடியாக உள்ளது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.25 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீ்ர்மட்டம் 59.05 அடியாக இருந்தது. இந்த ஆண்டு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் பேச்சிப்பாறை பகுதியில் மட்டும் 10 மிமீ மழை பதிவாகி இருந்தது. பேச்சிப்பாறையில் லேசான மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 339 கன அடியில் இருந்து 446 கன அடியாக உயர்ந்தது.
நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. காலையில் நாகர்கோவில் உள்பட சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்தது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications