தொலைபேசியில் பேசிய பிரணாப் முகர்ஜி தம்மிடம் ஆதரவு கோரவில்லை: எல்.கே. அத்வானி
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தம்மை தொடர்பு கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி தமக்கு ஆதரவு தருமாறு கோரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.
அத்வனி தமது ப்ளாக்கில் இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது:
பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் முதலில் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் என்னிடம் பேசினார். அதன் பின்னர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அப்போது தம்மை வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று மட்டும்தான் பிரணாப் கூறினார். தமக்கு ஆதரவு தருமாறு கோரவில்லை. 1970-ம் ஆண்டு முதல் தமக்கும் பிரணாப்புக்குமான உறவு குறித்து பேசிக் கொண்டோம். ராஜ்யசபாவில் பணியாற்றிய காலம் குறித்தும் மட்டும் இருவரும் பேசிக் கொண்டோம் என்று அத்வானி அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரணாப்பை தேர்வு செய்வதற்கு முன்பே தங்களிடம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரப்பு பேசியிருக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு பாஜக கூறியிருந்தது. இதனால்தான் சங்மாவை ஆதரிக்க வேண்டியிருக்கிறது என்றும் பாஜக விளக்கம் அளித்திருந்தது.
தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட பிரணாப் ஆதரவு கோரவில்லை என்று அத்வானி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications