எதியூரப்பா நெருக்கடி.. கர்நாடக முதல்வர் சதானந்த கெளடாவை மாற்ற பாஜக முடிவு?
பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வர் சதானந்தா கவுடாவை மாற்றுவதற்கு பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் சுரங்க முறைகேட்டில் சிக்கிய எதியூரப்பா பதவியில் இருந்து இறங்கியதைத் தொடர்ந்து சதானந்தா கவுடா முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் எதியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களும் சதானந்தாவுக்கு குடைச்சல் கொடுத்தே வந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த எதியூரப்பா, தமக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை போர்க்கொடி தூக்கிப் பார்த்தார். ஆனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் சதானந்த கவுடா பதவியேற்ற பிறகு 10 மாதங்களாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டாததால் அந்தக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று புது நெருக்கடி ஒன்றை எதியூரப்பா ஆதரவாளர்கள் ஏற்படுத்தினர். இந்தக் கூட்டத்தில் எதியூரப்பாவின் ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக தேர்ந்தெடுக்கவும் அவர்கள் திட்டமிட்ட்டிருந்தனர்.
இந்நிலையில் கத்காரியின் வீட்டு திருமணத்தில் எதியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் கர்நாடக மாநில பிரச்சனைக்கு 1 வாரத்தில் தீர்வு காணப்படும் என்று கத்காரி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 28-ந் தேதியன்று பாஜகவின் மூத்த நிர்வாகி சதீஷ் மற்றும் கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பெங்களூரில் முகாமிட உள்ளனர். பெங்களூரில் எதியூரப்பா, சதானந்தா கவுடா மற்றும் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தும் இவர்கள் மூத்த அமைச்சர்களையும் சந்திக்க உள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது முதல்வர் சதானந்தா கவுடாவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக்க முடிவு செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட்












Click it and Unblock the Notifications