குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு திரட்ட 12 பேர் குழுவை அமைத்தது காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு திரட்டுவதற்காக 12 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்திருக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வரும் 28-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். பிரணாப்புக்கு ஆதரவு திரட்ட மத்திய அமைச்சர்கள் அந்தோணி, சிதம்பரம், அம்பிகா சோனி, ராஜீவ் சுக்லா, பவன் குமார் பன்சால் மற்றும் அகமது படேல், ஜனார்த்தன் திரிவேதி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், குரியன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பிரணாப்பை ஆதரிக்கும் கட்சிகள் மட்டுமின்றி மற்ற மாநில கட்சிகளின் ஆதரவையும் இக்குழு திரட்ட உள்ளது. இதற்கான செயல்திட்டத்தை இக்குழு இன்று கூடி ஆராய உள்ளது.












Click it and Unblock the Notifications