For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப்பை மார்க்சிஸ்ட் ஆதரிக்க திரிணாமுல் நிலைப்பாடே காரணம்- பிரகாஷ்காரத்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுதான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் "பீப்பிள்ஸ் டெமாக்கரசி' ஏட்டில் பிரகாஷ் காரத் கூறியுள்ளதாவது:

குடியரசுத்தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், தேசிய ஜனநாயக கூட்டணியிலும் ஆரம்பத்தில் கடும் குழப்பம் நிலவியது. இப்போதுதான் தெளிவான நிலை ஏற்பட்டுள்ளது.

வேட்பாளரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தனித்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலை புறக்கணிப்பது என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துப் போவதாக ஆகிவிடும். இது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The CPM decision to support UPA presidential candidate Pranab Mukherjee was spurred by Trinamool Congress chief Mamata Banerjee's staunch opposition to the veteran Congress leader and its innate thrust for a president
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X