குற்றாலத்தில் ரூ.5 கோடியில் வளர்சசிப் பணி: அமைச்சர் கோகுல இந்திரா ஆய்வு
தென்காசி: குற்றாலத்தில் சு்ற்றுலாத் துறை மூலம் ரூ.5 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா திங்கட்கிழமை காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குற்றாலம் வளர்சசி பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்குவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதனையடுத்து என்ன என்ன பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி குற்றாலத்தில் ஐந்தருவி பூங்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை திங்கட்கிழமை காலை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விஸ்வநாத் ராவ் பூங்காவிற்கு சென்ற அவர் அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள், விளக்குகள், நீர் ஊற்றுகள், கிரானைட் பெஞ்சுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மெயின் அருவிக்குச் சென்ற அவர் அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள வேலியின் பலத்தை சோதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மெயின் அருவி அருகே பெண்கள் உடை மாற்றும் அறையை ஆய்வு செய்தார். ஐந்தருவியில் உள்ள வசதிகள் மற்றும் விஐபி அருவிகள் அருகே அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஆகியவைற்றை பார்வையிட்டார்.
சுற்றுலாத் துறை செயலாளர் ஜெயக்கொடி, சுற்றுலாத் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட அதிமுக பொருளாளர் சண்முகசுந்தரம், பேரூராட்சி மன்ற தலைவர்கள் லதா அசோக்பாண்டியன், காத்தவராயன், தென்காசி நகர்மன்ற தலைவி பானு ஜமீன், கவுன்சிலர்கள் குமார் பாண்டியன், ஷீலா ஜெயசங்கர் உள்பட பலர் அவருடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications