இந்தியாவில் ரூ.28 ஆயிரம் கோடி முதலீடு செய்ய கோகா கோலா நிறுவனம் முடிவு!

பிரபல குளிர்பான நிறுவனமான கோகா கோலா, இந்தியாவில் மிகப் பெரிய வியாபார சந்தையை கொண்டுள்ளது. இந்தியாவில் கோகா கோலாவின் வியாபாரத்தை மேலும் பெருக்கும் வகையில், வரும் 2020ம் ஆண்டிற்குள் ரூ.28 ஆயிரம் கோடி முதலீடு செய்ய தீர்மானித்துள்ளது.
இது குறித்து கோகா கோலா நிறுவனத்தின் தலைவர் முக்தர் கின்ட் கூறியதாவது,
கோகா கோலா நிறுவனம் வரும் 2020ம் ஆண்டிற்குள் உலக அளவில் 30 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 5 பில்லியன் டாலர்கள் (ரூ.26 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய உள்ளது.
கடந்த ஆண்டு(2011) நவம்பரில் அறிவிக்கப்பட்ட முதலீட்டை விட, இது 3 மில்லியன் டாலர் அதிகமாகும். இந்த முதலீட்டின் மூலம் குளிர்பானங்களை பாட்டில்களில் அடிக்கும் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் குளிர்பானங்களை பாட்டில்களில் அடிக்கும் வரிசையை அதிகரிக்க முடியும். மேலும் தற்போது உள்ள கோகா கோலா நிறுவன தொழிற்சாலைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு, வியாபாரத்தை பெருக்க முடியும்.
இந்தியாவில் நடைபெறும் வியாபாரம் குறித்து நாங்கள் கணக்கிட்டதில், இங்கு முதலீடு செய்வது சரியான முடிவு என்று நம்புகிறோம். இந்தியாவில் கோகா கோலாவின் வியாபாரத்தை பெருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications