நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு நர்ஸ் மகள் பலி
நெல்லை: நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு நர்ஸ் ஒருவரின் குழந்தை பலியானது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் டெங்கு காய்ச்சல் இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை நெல்லை மாவட்டத்தில் மட்டும் 29 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ஏர்வாடி எஸ்.என்.எஸ். புரத்தைச் சேர்ந்த தமிழ்மாறன்-நிர்மலா தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை சுகபூரணிக்கு கடந்த 18ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கடந்த 20ம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையி்ல் டெங்கு வார்டில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகி்ச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று குழந்தை இறந்தது. இதனால் நெல்லை மாவட்ட அளவில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 30க உயர்ந்துள்ளது. தென்மாவட்ட அளவில் 57 க உயர்ந்துள்ளது. குழந்தை சுகபூரணியின் தாய் நிர்மலா தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு குழந்தைகள் வார்டில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் வார்டில் 40க்கும் மேற்பட்டவர்கள் என 80 பேர் காய்ச்சலுக்கு சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவரது குழந்தை சாய் பிரசாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications