For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போனில் பேசியதால்தான் அண்ணா மேம்பால விபத்து-பஸ் டிரைவர் கைது!

Google Oneindia Tamil News

Bus Accident
சென்னை: செல்போனில் பேசியபடி மாநகரப் போக்குவரத்துக் கழக டிரைவர் பஸ்ஸை ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா மேம்பாலத்தில் பஸ்சை விபத்துக்குள்ளாக்கியதாக பஸ் டிரைவர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன.

சென்னை பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவற்றை உடைத்துக் கொண்டு மேலிருந்து விழுந்தது.

இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்தனர். சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்த விபத்து நேற்று பரபரப்பைக் கிளப்பி விட்டு விட்டது.

பஸ் டிரைவர் பிரகாஷும் இந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவர் இடதுபக்கம் பஸ்சைத் திருப்பியபோது செல்போனில் பேசியபடியே வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களும், விபத்தை நேரில் பார்த்தவர்களும் கூறினர்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். டிரைவர் பிரகாஷ் வைத்திருந்த இரு செல்போன்களையும் வாங்கி பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது விபத்து நடந்த சமயத்தில் அவர் செல்போனில் பேசியது நிரூபணமானது. இதையடுத்து பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

அவரை பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கை குறித்து தற்போது போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

English summary
MTC bus driver Prakash has been arrested in Anna flyover bus accident. He was charged for negligence in duty. His two mobile phones have been seized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X