2 செட் டிரஸ்ஸை எடுத்துக் கொண்டு சிறைகளை நிரப்ப வாருங்கள்...திமுகவினருக்கு அட்வைஸ்!
கோவை: சிறை நிரப்பும் போராட்டத்தை மிகப் பெரிய அளவிலும், சிக்கலின்றியும் நடத்த திமுக முழு வீச்சில் தயாராகி வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக அக்கட்சியினருக்கு தெளிவான உத்தரவுகள், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் போயுள்ளதாம்.
திமுக நிர்வாகிகளையும், முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்வது, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்வது ஆகியவற்றைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது திமுக. இதற்கான முன்னேற்பாடுகளில் தற்போது அனைத்து மாவட்ட திமுக கிளைகளும் மும்முரமாகியுள்ளன.
கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் கட்சி ஊழியர் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகிகள்,மறியல் போராட்டத்தில், கிளை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். பங்கேற்க உள்ளோர் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண்ணுடன், படிவத்தில் கையெழுத்திட்டு, 30ம் தேதிக்குள், மாவட்ட அலுவலகத்தில் தர வேண்டும்.
அன்னூர் ஒன்றியத்தில் குறைந்தது, 300 பேராவது, மறியலில் ஈடுபட வேண்டும். மறியலுக்கு வருவோர், இரண்டு செட் துணிகளுடன், சிறைக்கு செல்ல தயாராக வர வேண்டும். மொபைல் போன், கொண்டு வரக்கூடாது. போலீசார் முன்னெச்சரிக்கையாக, கைது செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, மறியலுக்கு ஒருநாள் முன்னதாகவே, வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, மறியல் நேரத்தில், மறியல் இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications