புனே ஜெர்மன் பேக்கரியில் குண்டுவைக்க கொழும்பில் பயிற்சி எடுத்த தீவிரவாதிகள்- இலங்கை அரசுக்கு தொடர்ப

2010-ம் ஆண்டு புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடித்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 56 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மிர்ஸா ஹிமாய்ட் பெய்க் என்பவன் கைது செய்யப்பட்டிருந்தான். இவனது தகவலின் அடிப்படையிலேயே அபு ஜிண்டால் பற்றிய தகவல்களும் உளவுத்துறைக்கு முதன் முதலாக தெரியவந்தது.
அபு ஜிண்டால் தற்போது சிக்கியிருக்கும் நிலையில் பெய்க் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்புக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாக்குதலுக்கு திட்டம் போட்டவன் லஷ்கர் இ தொயா இயக்கத்தைச் சேர்ந்த பயாஸ் காக்ஸி. இதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்க அவன் தேர்ந்தெடுத்த இடம் இலங்கைத் தலைநகர் கொழும்பு என்கின்றனர் மஹாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள்.
கொழும்பில் போய் இறங்கியவுடன் விசா வழங்கப்படும் என்பதால் அதனை பயன்படுத்தி கொழும்பில் ரகசிய இடம் ஒன்றில் முகாம் அமைத்து வெடிகுண்டுகளை தயாரித்து, அதை வெடிக்க வைத்து பெய்க் உள்ளிட்டோருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறான் காக்ஸி. 3 வாரங்கள் தொடர்ச்சியாக கொழும்பில் பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முகாமில் தற்போது சிக்கியுள்ள அபு ஜிண்டால் இருந்ததாகவும் ஜிண்டால்தான் பெய்க்குக்கு முழுமையான பயிற்சி கொடுத்த தளபதி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான நட்புறவு கொண்ட நாடு இலங்கை. 2008- ஆண்டு யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலப்பகுதி என்பதுடன் பாகிஸ்தான் படையினர் பெருமளவும் போரில் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே காலப்பகுதியில் இலங்கையின் தலைநகரிலேயே தீவிரவாதிகள் தங்கி பயிற்சி எடுத்திருப்பதால் இலங்கை அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications