ரூ. 2 லட்சத்திற்கு விற்கப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று இறந்தது
நெல்லை: நெல்லை அருகே பணத்திற்காக விற்கப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று திடீர் உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்தது.
நெல்லை மாவட்டம் நடுவங்குறிச்சியைச் சேர்ந்த சுடலை மனைவி செல்வி. அண்மையில் அவரது கணவர் பிரிந்து சென்றதால் செல்வி தற்போது சுத்தமல்லி வ.உ.சி. நகரில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 8 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என வருந்திய செல்வி அவைகளை விற்பது குறித்து அருகில் வசித்து வந்த பாத்திமாவிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி பாத்திமா மேலப்பாளையம் மற்றும் சம்பாவர் வடகரையைச் சேர்ந்த புரோக்கர்கள் மூலம் 2 குழந்தைகளையும் ரூ. 2 லட்சத்திற்கு விற்றார். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் புரோக்கர்கள் ஏமாற்றிவிட்டனர்.
இந்த விவகாரம் போலீசுக்கு தெரிய வரவே சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் விசாரணை நடத்தி விற்கப்பட்ட குழந்தைகளை மீட்டார். இது தொடர்பாக தாய் செல்வி, பாத்திமா மற்றும் புரோக்கர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் நெல்லை சரணாலயத்தின் சார்பில் ஆலங்குளத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று ஒரு குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications