கன்னியாகுமரி கொலையாளிகள் மூவரின் மரண தண்டனையை ரத்து செய்தார் குடியரசுத் தலைவர்
சென்னை: நீதிமன்றத்துக்குள் கொலை செய்த வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான். செல்வத்துக்கும் அதே நாகர்கோவிலைச் சேர்ந்த அய்யாவு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் 1994-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் செல்வத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் அய்யாவு சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வத்துடன் ராதாகிருஷ்ணன், ஷேக் மீரான் ஆகியோர் இணைந்து நீதிமன்றத்துக்குள் உள்ளே சென்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் அய்யாவுவை போட்டுத் தள்ளினர். இந்த வழக்கில் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.
இதைத் தொடர்ந்து மூவரும் தங்களது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு கடந்த 1999-ம் ஆண்டு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனுக்களை பரிசீலித்த குடியரசுத் தலைவர், மூவரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மூன்று கைதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. மூவரும் அளவில்லா மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications