பேசியபடி 15 பவுன் நகை போடாததால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
சென்னை: பேசியபடி 15 பவுன் நகை போடாததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் உமாபதி. ரயில்வே ஊழியர். அவரது மகள் கீர்த்திகா. அவருக்கும் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வேலூரைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக 15 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு பைக்கும் வாங்கிக் கொடுக்குமாறு மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர்.
அதற்கு உமாபதி சம்மதித்தார். கடனை வாங்கியாவது வரதட்சணையைக் கொடுத்துவிடுவது என்று அவர் முடிவு செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து திருமணம் நடக்கட்டும், அதன் பிறகு 2 மாதம் கழித்து கேட்டபடி 15 பவுன் நகை போடுகிறோம் என்றனர். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்க மறுத்தனர். பின்னர் ஒருவழியாக சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஒப்பக் கொண்டனர்.
இன்று காலை வில்லிவாக்கத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கீர்த்திகா-பிரேம்நாத் திருமணம் நடப்பதாக இருந்தது. முன்னதாக நேற்றிரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாப்பிள்ளை வீட்டார் பிரேம்நாத்துடன் மண்டபத்திற்கு வந்தனர். வந்ததில் இருந்து பூ அலங்காரம் சரியில்லை, எங்களை வரவேற்க ஆட்கள் இல்லை என்று குறைபாடிக் கொண்டிருந்தனர். இதனால் 2 வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்திற்கு பிறகு தனது வீட்டாருடன் தொடர்பு வைக்க மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாகக் கொடுக்குமாறு கீர்த்திகாவிடம் மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர்.
இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் திருமணம் நின்றது. இது குறித்து உமாபதி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டதற்கு, நகைக்காக ஒன்றும் திருமணத்தை நிறுத்தவில்லை. பெண் வீட்டாரின் செயலால் தான் திருமணம் நின்றது என்றார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications