அசாம், மேகலாயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்
கவுகாத்தி: பெரும் வெள்ளத்தில் தத்தளித்து வரும் அசாம் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் தொடர் மழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்துக்கு 61 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் உலகிலேயே மிகப் பெரிய நன்னீர்தீவு என்று பெயர் பெற்ற பிரம்மபுத்திரா நதிக்கு நடுவே உள்ள மஜூலி தீவை மையமாகக் கொண்டு இன்று காலை 9.45 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.8 ரிக்டராக பதிவாகி இருந்தது. அசாம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அசாமின் அண்டமை மாநிலமான மேகலாயா மற்றும் மணிப்பூரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications