சோனியாவை பிரதமராக்கியிருப்பீங்களோ... கலாமுக்கு சரத் யாதவ் கண்டனம்
டெல்லி: சோனியா காந்திக்கு பிரதமராக பதவியேற்பு செய்து வைக்க தாம் தயாராக இருந்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தமது புத்தகத்தில் எழுதியிருப்பதை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் விமர்சித்துள்ளார்.
அப்துல் கலாம் எழுதியுள்ள டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகத்தில் 2004-ம் ஆண்டு சோனியா பிரதமராக பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும் அவருக்கு பதவியேற்பு செய்து வைக்க தாம் தயாராக இருந்தேன் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
இதை விமர்சித்துள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், 8 ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த அப்துல் கலாம் தற்போது இப்படி பேசியிருப்பது சுயநலத்தை அதிகரித்துக் கொள்ளத்தான் என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவி போன்ற பெரிய பொறுப்புகளில் இருப்பவர் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இதுவரை கலாம் மீது இருந்த மரியாதை இப்போது போய்விட்டது என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் பிரணாப் முகர்ஜிக்கு சரத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இக்கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications