பருவமழை தாமதம் : மணிமுத்தாறு அணையில் தண்ணீர் வற்றியது
நெல்லை: பருவமழை தாமதமடைந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, காரையாறு உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்துள்ளது. தண்ணீர்கொட்டும் அருவிகளில் பாறை இடுக்குகளில் மட்டும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் காணப்படுகின்றன. வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் ஜூன் மாதம் முடிந்தும் மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் கடும் வறட்சி காணப்படுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீ்ர் தேவையை சமாளிக்க கூட திறனின்றி பொதுப்பணிதுறை திணறி வருகிறது. மணிமுத்தாறு அருவியில் எப்போதும் தண்ணீர் கொட்டும். கடும் வறட்சி காரணமாக அருவியில் தண்ணீர் குறைந்துள்ளது.
பாறை இடுக்குகளில் மட்டும் லேசான தண்ணீர் கசிவு உள்ளது. இந்ததண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 118 கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.63 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 31 கன அசி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 75 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணைப்பகுதி குளம் போன்று காட்சியளிக்கிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications