விமானத்தில் கருந்தேள்... கடிபட்ட பயணி மயக்கம்.. விமானம் தரையிறக்கம்
சென்னை: சென்னையிலிருந்து பஹ்ரைனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பயணி அணிந்திருந்த கோட்டில், கருந்தேள் இருந்துள்ளது. அது கடித்து அந்த பயணி அலறி மயக்கமுற்றார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து இன்று காலை பஹ்ரைனுக்கு கல்ப் ஏர் விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற பயணியை ஏதோ கடிப்பது போல உணர்ந்துள்ளார். என்ன என்று பார்த்தபோது அவரது கோட்டில் கருந்தேள் ஒன்று இருந்தது.
இதைப் பார்த்து அவர் அலறினார். உடனடியாக அருகில் இருந்த பயணிகள் சேர்ந்து அந்த கருந்தேளை அடித்துக் கொன்று விட்டனர். இருப்பினும் கருந்தேள் கடித்த வித்யாசாகர் மயக்கமடைந்தார்.
இதையடுத்து உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. வித்யாசாகரை மருத்துவமனையில் போய்ச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேள் ஒன்றால் விமானம் தரையிறக்கப்படுவது சென்னை விமான நிலையத்தில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications