தெருநாய்களை விஷ ஊசி போட்டுக் கொன்ற திமுக பஞ்சாயத்து தலைவர்: புகார் கொடுத்த அதிமுக கவுன்சிலர்
குமரி: தெரு நாய்களை விஷ ஊசி போட்டுக் கொன்ற திமுக பஞ்சாயத்து தலைவர் மீது அதிமுக கவுன்சிலர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அருணாச்சலதேவர். திமுக அவைத் தலைவராகவும் உள்ளார். அவரும், மேலும் 3 பேரும் சேர்ந்து ஈசமாந்திமங்கலம், நாவல்காடு ஆகிய பகுதிகளில் திரிந்த தெரு நாய்களை விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளனர். நாய்களின் உடல்களை அருகில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றி புதைத்துவிட்டனர்.
இது குறித்து அறிந்த தோவாளை ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் நாய்களைக் கொன்ற விவகாரம் தொடர்பாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அருணாச்சலதேவர் மற்றும் 3 பேர் தெருநாய்களைக் கொன்றதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் கால்நடை மருத்துவர்களை அழைத்துக் கொண்டு அந்த தென்னந்தோப்பிற்கு சென்றனர். அங்கு புதைக்கப்பட்ட நாய்களின் உடல்களை தோண்டி எடுக்க முயன்றனர். ஆனால் வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்தன.












Click it and Unblock the Notifications