மோடியை முதல்வராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்... பாஜகவினரை உசுப்பிவிடும் கேசுபாய்
அகமதாபாத்: நரேந்திர மோடியை மீண்டும் குஜராத் மாநில முதல்வராக்கிவிடக் கூடாது என்று மூத்த பாஜக தலைவரும் குஜராத் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் பாஜக தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமது ப்ளாக்கில் கேசுபாய் படேல் எழுதியுள்ளதாவது:
குஜராத் மாநில பாஜக தொண்டர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் நரேந்திர மோடியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக ஏற்காதீர்கள். குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு குடும்பம் போல செயல்படுகின்றனரா? இல்லையே.. கட்சித் தொண்டர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். மாநிலத்தில் ஆளும் ஆட்சியாளர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. ஆட்சியாளர்களைப் பொருத்தவரையில் தொழிலதிபர்கள்தான் அவர்களது நண்பர்கள். தேஎர்தல் வரும்போதுதான் தொண்டர்களின் நினைவு அவர்களுக்கு வரும். அதனால் நரேந்திர மோடியை மீண்டும் முதல்வராக்கிவிடக் கூடாது என்பதில் அனைத்து தொண்டர்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கேசுபாய் படேல்.
குஜராத் மாநில முதல்வராக கேசுபாய் படேல் இருந்தார். அவரை நீக்கிவிட்டு முதல்வராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அரசியலில் இருந்தே ஒதுங்கி இருந்த கேசுபாய் படேல் கடந்த சில மாதங்களாக மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications