மின் கம்பத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த மின் ஊழியர் ...விழுப்புரத்தில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மின்சாரப் பழுது நீக்குவதற்காக மின்கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து அவர் எரிந்தார். நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்தபடி மின்கம்பத்தின் உச்சியில் சிக்கியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் அதைப் பழுது பார்ப்பதற்காக ராமலிங்கம் என்ற மின்வாரிய ஊழியர் அங்கு வந்தார். மின்கம்பத்தில் ஏறிய அவர் மின்பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் அவரது உடலில் தீப்பிடித்துக் கொண்டது.
இடுப்பு, வயிறு, கால் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அவர் மயங்கிய நிலைக்குப் போய் விட்டார். இருப்பினும் தீயின் தாக்கத்தால் அவர் அலறித் துடித்தார். எழுந்திருக்கவும் முடியாத அளவுக்கு மின்சாரத் தாக்கம் இருந்ததால் அவர் பெரும் வலியுடனும், தவிப்புடனும் அலறினார்.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்கம்பத்தின் உச்சியில் மின்வாரிய ஊழியர் தீப்பிடித்து எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications