நாகையில் வாக்கிங் சென்ற பாஜக நிர்வாகி படுகொலை: பதட்டம்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புகழேந்தி வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த புகழேந்தி(54). அவர் தினசரி தனது வீ்ட்டில் இருந்து சுமார் 5 கீ.மீ.தூரம் வரை வாக்கிங் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல் புகழேந்தி இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வாக்கிங் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.
அந்த பக்கம் வாக்கிங் வந்த சிலர் புகழேந்தி படுகொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புகழேந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை குறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகி்ன்றனர். இந்த சம்பவத்தால் நாகையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக வாக்கிங் கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications