அதிமுக அரசைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற திமுக தொண்டர்!
திண்டுக்கல்: திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பானது.
திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.
அதேபோல திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அனைவரும் போன பின்னர் பிற்பகல் 1 மணியளவில் அங்கு வந்த சீனிவாசன் என்ற திமுக தொண்டர், அதிமுக அரசைக் கண்டித்து கோஷமிட்டார். அதன் பின்னர் தனது தலையில், பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப் பார்த்து அங்கிருந்த போலீஸார் ஓடி வந்து தீப்பெட்டியைத் தட்டி விட்டு சீனிவாசனை தடுத்து நிறுத்தினர். பிறகு அவரையும் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications