மின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'
திருச்சி: மின்சாரம் தாக்கி உயிரிழப்போர் மற்றும் காயமடையும் நபர்களின் எண்ணிக்கை குறைக்க, மின் விபத்துகளை தவிர்க்க தேவையான சில முக்கிய வழிமுறைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பலரும் மின்சாரம் தாக்கி காயமடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சாலைகளில் மின் கம்பி அறுந்து கிடந்தால் பொது மக்கள் அதன் அருகில் செல்லவோ, அதனை தொடவோ கூடாது. அது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்சார வாரிய பணியாளர்களை தவிர வேறு யாரும் மின் தடையை சரி செய்ய மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணியில் ஈடுபட கூடாது. பொது மக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் செல்லும் மின்பாதைகள், மின்கம்பிகளை தொடவோ, அருகில் செல்லவோ கூடாது. முடிந்த வரை மின் கம்பிகளின் அருகில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
சுமை ஏற்றி செல்லும் டிராக்டர், லாரிகள் சாலையில் செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை, கம்பிகளை உரசாமல் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடு மற்றும் கட்டிடம் கட்டும்போது மின் பாதையில் இருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
திருவிழா காலங்களில், தேரோட்ட நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் போது மின் இணைப்பில் மின்நிறுத்தம் செய்து விட்டு பணியை கவனமாக செய்ய வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications