9 மணிக்கு முன்பே போய் விடுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்ட போலீஸ்!
சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் எதிரொலியாக இன்று காலை 9 மணிக்குள் சென்னை சைதாப்பேட்டை, போர் நினைவுச் சின்னம், எழிலகம், டிஎம்எஸ் வளாகம், பனகல் மாளிகை ஆகிய பகுதிகள் வழியாகச் செல்வோர் போய் விடுமாறு காவல்துறை நேற்று கேட்டுக் கொண்டதால் இன்றுகாலை அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திமுகவினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று காவல்துறையினர் விடுத்திருந்த அறிக்கையில்,
சென்னையில் 22 இடங்களில் தி.மு.கவினரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது நடக்கும். இந்தப் போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் கலந்து கொள்கிறார்.
சிபிஐ கோர்ட்டின் முன்அனுமதியுடன் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, சைதை பனகல் மாளிகை, டி.எம்.எஸ். வளாகம், எழிலகம் மற்றும் போர் நினைவுச்சின்னம் வழியாக அலுவலகம் செல்வோர் காலை 9 மணிக்கு முன்னதாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் இன்று காலை சீக்கிரமே கிளம்பிச் சென்றதால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கூடுதலாக இருந்தது.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications