மமதா பானர்ஜி நிச்சயம் எனக்கு ஆதரவளிப்பார்: பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தனக்கு ஆதரவு அளிப்பார் என்று தான் நம்புவதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஹோட்டல் ஒன்றில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தி்த்து பேசினார். எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான கொடியேறி பாலகிருஷ்ணன், பேபி ஆகியோரை சந்தி்த்து ஆதரவு கேட்டார். அப்போது மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, வயலார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பிரணாப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். இதனால் தான் அரசியல் ரீதியாக என்னை எதிர்த்து வரும் சிவசேனா, பார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி எனக்கு ஆதரவு அளிப்பார் என்ற நம்பி்க்கை உள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications