மதுரை இசைக் கல்லூரியில் சேர வருமாறு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அழைப்பு
மதுரை: தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரையில் பசுமலை தேவசகாயம் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இக்கல்லூரியில் குரல் இசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், பரதநாட்டியம் ஆகிய கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப் படிப்புகளும், ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பும் கற்பிக்கப்படுகிறது. இக்கலைப் பிரிவுகளில் சேர்ந்து பயில்வதற்கு 13 வயது நிறைவு பெற்றவராகவும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இசை ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், இசைக் கலைமணி பட்டயமும் பெற்றிருக்க வேண்டும்.
கற்க விரும்பும் கலைப் பிரிவில் முன் அனுபவமும், ஆர்வமும் இருப்பின் கல்வி மற்றும் வயது தகுதி தளர்த்தப்படும். மேலும், அரசு மாலை நேர இசைக் கல்லூரி, பெரியார் நிலையம் அருகிலுள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இயங்கி வருகிறது.
இக்கல்லூரியில் பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் இசை ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இசையை கற்றுக்கொள்ளலாம். எனவே, இந்த அரிய வாய்ப்பை இசை கற்க ஆர்வமுள்ள அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications