ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு- ஜூலை 10-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. ஆனால் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு உடல் நலக் குறைவு என்பதால் வழக்கை ஜூலை 9-ந் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அவரது உதவியாளரான சந்தேஷ் செளடா கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதற்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மணிசங்கர் மற்றும் பி. குமார் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஜூலை 9-ந் தேதி தங்களுக்கு சென்னையில் வேலை இருப்பதால் ஜூலை 11 அல்லது 12-ந் தேதிக்கு வழக்கின் விசாரணையை நடத்தலாம் என்று கூறினர். இதற்கு சந்தேஷ் செளடா எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் நடைபெறக் கூடும் என்பதாலும் ஜூலை 13-ந் தேதி மத்திய சட்ட ஆணையத்தின் பணிக்காக டெல்லி செல்ல வேண்டியதிருக்கிறது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா வரும் 10-ந் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications