தமிழகத்திற்கு செல்ல முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு 2 நாட்கள் அனுமதி:சிபிஐ தனி கோர்ட்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர், முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசா. இந்த வழக்கில் 15 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராசாவுக்கு, டெல்லி சி.பி.ஐ. தனிக் நீதிமன்றம் கடந்த மே 15ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிபந்தனைகளில் டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி ராசா, தமிழகத்திற்கு செல்லக் கூடாது என்பது முக்கியமானது. இந்த நிலையில் தனத சொந்த தொகுதியான நீலகிரியில் 2 நாட்கள் வந்து செல்ல அனுமதி அளிக்க கோரி, சி.பி.ஐ நீதிமன்றத்தில் ராசா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சைனி, சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காததால், ராசாவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவில் கூறியிருப்பதாவது,
ராசாவின் மனுவிற்கு சி.பி.ஐ. தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இன்று (நேற்று) மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஆ.ராசா ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் 6ம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தமிழகம் போய் வர அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications