குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க திருமாவுக்கு மன்மோகன் சிங் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடியரசு தலைவர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் திருமாவளவனை கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தான் ஆதரிப்பது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் தொலைபேசி மூலம் ஆதரவுகேட்டவுடன் பிரணாப் முகர்ஜியையே ஆதரிப்போம் என்று திருமாவளவன் உறுதியளித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+