மும்பை தாக்குதலுக்கு ஆயுத பயிற்சி கொடுத்த ஹம்சா இறந்துவிட்டான்: அபு ஜிண்டால் வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த அபு ஜிண்டால் அண்மையில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாகவும் பாகிஸ்தானி உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு உள்ள தொடர்பு குறித்தும் ஏராளமான தகவல்களை தெரிவித்திருந்தான். இவனது வாக்குமூலம் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாக்குமூலத்தில் 2005-ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற இந்திய விஞ்ஞானிகள் கழக மாநாட்டில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதி அபு ஹம்சா 2009-ம் ஆண்டு மர்ம நோயால் இறந்துவிட்டதாக ஜிண்டால் கூறியிருக்கிறான்.
மேலும் அபு ஹம்சதான், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவன் என்றும் ஹம்சாவின் இறுதி ஊர்வலத்தில் தாம் நேரில் பங்கேற்றதாகவும் ஜிண்டால் கூறியுள்ளான்.












Click it and Unblock the Notifications