காரைக்குடி அருகே ஊராட்சி தலைவரைக் கடத்திய 4 பேர் கைது
காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ளது சங்கராபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சித் தலைவராக இருப்பவர் மாங்குடி. அவரது அக்கா மகன் சரவணன், புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்த கணபதி (42) என்பவரது மகளைக் கடத்திவிட்டதாகப் புகார் எழுந்தது. இந்த கடத்தலில் மாங்குடிக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 24 ம் தேதி மாங்குடி வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் அவரைக் காரில் கடத்திச் சென்றது. அவர் கடத்தப்பட்டது குறித்து அவரது மனைவி தேவி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடியை தேடி வந்தனர்.
கே.புதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து, அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இடத்திற்குச் சென்று மாங்குடியை போலீசார் மீட்டு வந்தனர். அவரைக் கடத்திய 9 பேரை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர்.
இந்நிலையில் கே.புதுப்பட்டியைச் சேர்ந்த கணபதி (42), வெற்றிச் செல்வம் (36), ராமன்(35), பெரியசாமி (45) ஆகியோரை வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications