கைவிட்ட காதலனை திருமணம் செய்ய 3வது நாளாக போராட்டத்தை தொடரும் அனிதா
குமரி: ராணுவ வீரரான தனது காதலனை திருமணம் செய்யாமல், போராட்டத்தை நிறுத்தமாட்டேன் என்று காதலனின் பூட்டிய வீட்டின் முன் 3வது நாளாக தவம் கிடக்கிறார் கல்லூரி மாணவியான அனிதா.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறத்தை சேர்ந்தவர் அனிதா(21). பி.ஏ. 2ம் ஆண்டு மாணவியான இவர், முக்கூட்டுக்கல் பகுதியை சேர்ந்த சாஜன் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் ராணுவ வீரரான சாஜன் தற்போது அனிதாவை திருமணம் செய்ய மறுத்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சாஜனை திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன், அவரது வீட்டின் முன் அமர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார் அனிதா. ஆனால் சாஜனின் வீடு ஆள் நடமாட்ட இல்லாமல் பூட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது.
இது குறித்து கல்லூரி மனைவி அனிதா கூறியதாவது,
பள்ளி பருவத்தில் இருந்தே நானும், சாஜனும் காதலித்து வந்தோம். அவரை கணவனாக எண்ணிய நான், பலமுறை உல்லாசமாக இருக்க என்னையே அவருக்கு கொடுத்துள்ளேன். குமரி, நெல்லை, வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு சென்று நாங்கள் உல்லாசமாக இருந்துள்ளோம்.
சாஜனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு, விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது நாங்கள் 2 பேரும் சேர்ந்து கன்னியாகுமரி சென்றோம். அங்கு லாட்ஜில் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்துவி்ட்டு, ஊர் திரும்பிய போது எனது தந்தை மற்றும் உறவினர்களிடம் சிக்கி கொண்டோம்.
அதன்பிறகு ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், என்னை திருமணம் செய்து கொள்வதாக சாஜன் உறுதி அளித்தார். மேலும் கடந்த 7ம் தேதி என்னை முறைப்படி பெண் கேட்க எங்கள் வீட்டிற்கு வருவதாக சாஜன் கூறினார். ஆனால் கடந்த 7ம் தேதி சாஜன் வரவில்லை. மேலும் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த யாரும் இல்லாமல் பூட்டி கிடந்தது. போன் செய்து கேட்ட போது, என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார்.
தற்போது சாஜன் ராணுவத்தில் இருப்பதால், அதிக வரதட்சணை பெறலாம் என்று அவரது உறவினர் ஒருவர் அவருக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு சம்மதித்துள்ள சாஜன் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி வருகிறார்.
போலீஸ் நிலையத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த என்னை சாஜன் அழைத்தார். ஆனால் நான் போகவி்ல்லை. சாஜனின் மனைவியாக தான் இந்த இடத்தில் இருந்து செல்வேன். இல்லாவி்ட்டால் இங்கேயே சாகிறேன் என்றார்.
கடந்த 3 நாட்களாக சாஜனின் வீட்டிற்கு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் அனிதாவிற்கு, அப்பகுதியினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications