ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய இரவு பிரணாபுக்கு சோனியா விருந்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 18ம் தேதி இரவு விருந்து கொடுக்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவோடு முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் அதாவது வரும் 18ம் தேதி இரவு பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து கொடுக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த அவரை கௌரவிக்கும் வகையில் இந்த விருந்து பிரமாண்ட முறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீண்ட காலமாக கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜிக்கு அவர் ஆசைபட்டது போன்று பிரதமர் பதவி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் அவரை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications