சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா?: ஜி. ராமகிருஷ்ணன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திமுக மற்றும் அதிமுகவினரின் நிலப் பறிப்பு குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு விளக்கமளித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
திமுக மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் எங்களுக்கு இல்லை. கட்சி எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே மாநிலச் செயலாளரின் அறிக்கைகள், பேட்டிகள் அமைந்திருக்கும். ஆனால் இதற்கு தனிப்பட்ட முறையில் நோக்கம் கற்பிப்பது திமுக தலைமையின் நீண்டகால வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளது. விலை உயர்வுக்கு காரணமான பல கொள்கை முடிவுகளை மத்திய அரசே எடுக்கிறது. இதில் திமுகவுக்கும் பங்கு உண்டு. திமுக நடத்திய மறியல் போராட்டத்தில் விலைவாசி உயர்வும் முன் வைக்கப்பட்டது என்பதை வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும், உரம், பெட்ரோல் விலை உயர்வுகளை திமுக தலைமை கண்டு கொள்ளாதது ஏன்?
சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னையில் திமுக அரசு நடவடிக்கை எடுத்ததாக கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் 2008ல் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்ட 25 குடும்பங்களும் திமுக ஆட்சி இருக்கும் வரை மீண்டும் குடியமர்த்தப்படவில்லை என்பதற்கு அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் 950 ஏக்கர் நிலப் பறிப்பில் திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இணைந்து செயல்பட்டனர். கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தை மோசடியாக கிரயம் பெற்ற திமுக பிரமுகர் ஆட்சி மாறியதும் அதிமுகவில் இணைந்துவிட்டார்.
திமுக, அதிமுக ஆட்சிகளில் மணல் கடத்தல் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது. மணல் கடத்துபவர்கள் மீது கட்சி வித்தியாசம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் வலியுறுத்தி வருகிறது. மணல் கொள்ளை குறித்து கருணாநிதி எதுவும் கூறவில்லை.
சிறுதாவூர் நிலப் பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிவசுப்பிரமணியம் தனது அறிக்கையை 28-2-2010 அன்று அளித்தார். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு திமுக தலைவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
மனைப்பட்டா கேட்டு 25 லட்சம் ஏழைகள் போராடி வரும் நிலையில் நிலப் பறிப்பு நடப்பதை சுட்டிக் காட்டுகிறோம். இதனை தனிப்பட்ட விமர்சனம் என திசை திருப்புவதை மார்க்சிஸ்ட் ஊழியர்களும், தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications