ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை நாள்தோறும் கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு

க. அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தாமதப்படுத்துவதற்காக பல காரணங்களைக் முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் கூறி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக, தன்னிடம் தமிழிலேயே கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று அன்பழகன் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கோரி சசிகலா தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது, அன்பழகனின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்











Click it and Unblock the Notifications