குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியை மமதா ஆதரிக்கமாட்டார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியை நிறுத்துவதற்கும் முதலில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தவர் மமதா பானர்ஜி. பிரணாப்புக்குப் பதிலாக அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜி, மன்மோகன்சிங் ஆகியோரை நிறுத்தலாம் என்றும் கூறியிருந்தார். பின்னர் அப்துல்கலாமை நிறுத்த போராடிப் பார்த்தார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்போம் என்பதை தேர்தலுக்கு 72 மணிநேரத்துக்கு முன்பு அறிவிப்பதாகவும் கூறிவிட்டார்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் நிறுத்தலாம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளிடமும் காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸிடம் பேசப்படவில்லை. அதே நேரத்தில் ஹமீத் அன்சாரி நிறுத்தப்பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் அவரை ஆதரிக்காது என்றும் கூறப்படுகிறது. கோபால் கிருஷ்ண காந்தி அல்லது கிருஷ்ணா போஸ் ஆகிய இருவரில் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக நிறுத்தலாம் என்பது திரிணாமுல் தலைவர் மமதாவின் நிலைப்பாடு.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் மமதா மூட்டிய கலகத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்விலும் மமதா பரபரப்பை உருவாக்குவாரோ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications