லடாய் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெகதீஷ் ஷெட்டர்
பெங்களூர்: கர்நாடக மாநில பாரதிய ஜனதாவில் நேற்று அடித்துக் கொண்டிருந்த அத்தனை பெருந்தலைகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார் ஜெகதீஷ் ஷெட்டர்.
கர்நாடக ஆளுநர் பரத்வாஜை இன்று சந்தித்த சதானந்த கவுடா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை முறைப்படுத்திக் கொடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக சதானந்த கவுடாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நூற்றுக் கணக்கில் குவிந்த ஆதரவாளர்கள் அவரை ராஜினாமா செய்யப் போகவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருகிலோ மீட்டர் நீளத்துக்கு சதானந்த கவுடாவின் வாகனத்தை தொடர்ந்தும் அவரது ஆதரவாளர்கள் வழிமறித்துக் கொண்டே போக ஒருகட்டத்தில் போலீஸ் தலையிட்டு வழிஏற்படுத்திக் கொடுத்தது.
பின்னர் ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து தமது ராஜினமா கடிதத்தை முறைப்படிக் கொடுத்தார். அவர் ராஜினாமா கடிதம் கொடுத்த பின்னர் அரை மணி நேரம் கழித்து மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அனந்த குமார், சதானந்த கவுடா ஆகியோருடன் இணைந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டு அழைப்புவிடுத்திருப்பதாக கர்நாடக மாநில ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராகப் பதவியேற்கிறார். அவர் மட்டும்தான் நாளை பதவியேற்கிறாரா? இல்லை அவருடன் வேறு சிலரும் அமைச்சர்களாக பதவியேற்கின்றனரா? என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
-
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications