தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் எட்வின் ஜோவுக்கு பிடிவாரண்ட்
ஈரோடு: விபத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எட்வின் கோவுக்கு எதிராக ஈரோடு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆர்.என். புதூரைச் சேர்ந்தவர் இலியாஸ். கடந்த 2007ம் ஆண்டு ஆர்.என். புதூர் சாலையில் நடந்து சென்றபோது ஈரோடு பெரிய சேமூரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இலியாஸ் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகி்ச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக இருந்த எட்வின் ஜோ இலியாஸ் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி அளிக்க டாக்டர் எட்வின் ஜோவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பல முறை சம்மன் அனுப்பியும் அவர் வராததால் மாஜிஸ்திரேட் நம்பிராஜன் டாக்டருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார். டாக்டர் எட்வின் ஜோ தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications