கருணாநிதியைச் சுற்றித்தான் தமிழகத்தில் அரசியல் பண்ண முடியும்-இளங்கோவன்
ஈரோடு: தமிழகத்தில் கருணாநிதியைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. கருணாநிதியைச் சுற்றித்தான் இங்கு அரசியலே உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
கருணாநிதியைத் தனக்குப் பிடிக்கும் என்றும், அவர் மீது தான் நிறைய மதிப்பு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் இளங்கோவன். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசியலை பொறுத்தவரை தி.மு.க. தலைவர் கருணாநிதியை தொடாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது. அவரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது. மற்றவர்களை காட்டிலும் கருணாநிதி மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது.
காங்கிரஸ் கட்சியை நான் உயிர் மூச்சாக நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி தமிழ்நாடடில் ஆட்சி க்கு வரவேண்டும் என்று எங்களுக்கும் ஆசை உள்ளது. எனவேதான் நான் கருணாநிதி பற்றி விமர்சனம் செய்தேன். இது தவிர்க்க முடியாதது.
1967-ம் ஆண்டுக்கு முன் காங்கிரசை திமுகவினர் கடுமையாக விமர்சித்தார்கள். அதன் பிறகு காமராஜர் இறந்தபிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டியவர் கருணாநிதி.
திமுகவினர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான பேர் கலந்து கொண்டனர். இருப்பினும் இந்த போராட்டத்தை அவர்கள் சிதைத்துவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஏன் என்றால் மின்சாரம் கட்டணம் உயர்வு பற்றி அவர்கள் முழுமையாக மக்களிடம் எடுத்து சொல்லவில்லை.
மின்சார கட்டணம் இப்போது 2 மடங்கு உயர்ந்து உள்ளது. இதுபோல் முன்பு மீட்டர் கணக்கெடுத்த பின்னர் பணம் கட்டுவதற்கு போதிய அவகாசம் கொடுப்பார்கள். ஆனால் அப்போது மீட்டர் கணக்கெடுத்து 10 நாட்களுக்குள் பணம் கட்டவில்லை என்றால் அபராதம் போடுகிறார்கள். இதனால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த தேர்தலில் நான் கோபியில் போட்டியிட்டு இருந்தால் இன்னும் கூடுதல் ஒட்டுகள் பெற்றிருக்க முடியும். ஆனால் நான் பிறந்த ஊருக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் ஈரோட்டில் போட்டியிட்டேன்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மா அந்த பதவிக்கு தகுதியற்றவர். அதிமுக-திமுகவுக்கு அடுத்து 3 வது பெரிய கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications