என்ஜீனியரைத் தாக்கிய யூனியன் நிர்வாகி-தமிழகம் முழுவதும் ரயில்வே தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்!
நெல்லை: நெல்லையில் ரயில் நிலைய மெக்கானிக்கல் என்ஜீனியரை, எஸ்சி-எஸ்டி பிரிவு யூனியன் செயலாளர் தாக்கியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில்வே தொழிலாளர்கள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் சீனியர் மெக்கானிக்கல் என்ஜீனியராக இருப்பவர் ராஜா. இவரை ரயில்வே எஸ்.சி-எஸ்டி யூனியன் செயலாளர் செல்லையா என்பவர் தாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நெல்லை, செங்கோட்டை உள்ளிட்ட நிலையங்களில் ரயில்வே தொழிலாளர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். நிலையங்களுக்கு வந்த, புறப்படவிருந்த ரயில்கள் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
செங்கோட்டையில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் மணி, செயலாளர் கல்யாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதேபோல தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications