திருச்சுழி அருகே கலவரம்: தேக்கு தோப்புக்கு தீ- 60 பேர் கைது
திருச்சுழி: திருச்சுழி அருகே ஏற்பட்ட கலவரத்தில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், தேக்கு தோப்பு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டங்குளம் கிராமத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த வீரன் அழகுமுத்துக்கோன் நினைவிடம் உள்ளது. நேற்று அவரது நினைவு நாள் என்பதால் இந்த நினைவிடத்திற்கு இராமநாதபுரம், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாகச் சென்று கொண்டு இருந்தது.
வாகனங்களில் சென்ற சிலர் திருச்சுழி அருகே குலசேகரநல்லூரில் வாகனங்களை நிறுத்தி அங்கு உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் மது அருந்திவிட்டு, தண்ணீர் பாக்கெட்டுகளை அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் மீது எறிந்துள்ளனர். இதை அருகில் வசிக்கும் கிராமத்தினர் வந்து தடிக்கேட்டனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது.
இதில் அந்த ரோட்டில் சென்ற 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்திற்கும், அருகில் உள்ள தேக்கு மரத் தோப்பிற்கும் தீ வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.முருகேசன், ஆர்.டி.ஓ.குணசேகரன், தாசில்தார் வேலுசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை சமாதானம் செய்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.நஜ்மல்கோதா உத்தரவின் பேரில் அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதனால் அருப்புக்கோட்டை திருச்சுழி பாதையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications