பெண்ணை கொன்று பணம், நகை கொள்ளை: மகனின் நண்பனே தீர்த்துக்கட்டிய கொடூரம்
சென்னை: சென்னை ராயபுரத்தில் அரிசிக்கடை அதிபர் மனைவியைக் கொன்றவர்களை போலீசார் சம்பவம் நடந்த 15 மணிநேரத்திற்குள் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளையடித்த நகை, பணத்தை கொடுத்து வைத்திருந்த பெண் பாத்திமாவும் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராயபுரம், பி.ஏ.என். ராஜரத்தினம் சாலை 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாஸ்கர். அரிசி வியாபாரி. அவரது மனைவி ஞானசவுந்தரி (45). அவர்களது மகன் தினேஷ் குமார். தி. நகரில் துணிக்கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த ஞானசவுந்தரி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கம், 45 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொலை நடந்த 15 மணிநேரத்திற்குள் கொலையாளிகள் தினேஷ் குமாரின் நண்பர் சுரேஷ்(26) மற்றும் அவருடைய நண்பன் சதீஷ்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தினேஷ் குமாரின் நண்பன் என்பதால் சுரேஷ் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பெரும்பாலான நேரம் வீட்டில் ஞானசவுந்தரி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தினேஷ் குமாரின் வீட்டுக்கு தனது நண்பன் சதீஷுடன் வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த ஞானசவுந்தரியை ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர். கொள்ளையடித்தவற்றை தங்களுக்கு நெருக்கமான பாத்திமா(40) என்ற பெண்ணிடம் கொடுத்து வைத்தனர். இந்லிலையில் போலீசார் சதீஷையும், சுரேஷையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நகை மற்றும் பணத்தை வைத்திருந்த பாத்திமாவையும் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications